நாகரீக பெண்ணே

பெண்ணே!
நாகரீகம் எனும் பெயரில்
நயமாக உடையணிந்து
நானிலம் எங்கும்
நடைபயிலும் நீ
நாகரீக மோகத்தில்
சம்பிரதாயங்களை
சற்றுக் கவனிக்கவில்லை!

நீ செய்யும் சிறு தவறு
நானிலத்தில் மற்றோரை
நாசூக்காய் நசுக்குவதை
ஏன் தான் நீ இங்கு
அறிய மறந்தாயோ?

திருமண பந்தத்தின்
தீர்க்கமான வெளிப்பாடான
திருமாங்கல்யம் உன்
நெஞ்சினிலே காணவில்லை
காரணம் கேட்டால்
நாகரிக உடைக்கு
ஒத்து போகவில்லை என
சாடை செய்யும் பதில்கள்!

மஞ்சளரைத்து குங்குமமிட்டு
குனிந்து நடக்கும்
குடும்ப பெண்ணே
ஆடை நிறத்தில்
அழகழகாய் வதனமதில்
ஸ்டிக்கர் பொட்டணிந்து
பல வர்ண பூச்சுடன் நீ!

கண்டதும் காதல் கொள்ளும்
காளைகள் பலர் இங்கு
இவள் கன்னியா? இல்லை
வேறோர் கணவனின்
சொந்தமா என்று
கலங்கிப் பார்க்கும்
காலம் இது!

நாகரீக மோகத்தால்
நங்கை நீ மட்டுமல்ல
நேர்மையாய் காதல் செய்ய
காத்திருக்கும் ஆடவரின்
பூவான இதயத்தில்
தீ வைத்து செல்கின்றாய்!

காரிகையே!
கையெடுத்து கும்பிட்டு
கனம் பண்ண வேண்டிய உன்னை
காதல் செய்து கேலி பண்ண
காரணமாகி விடாதே!

வையகம் போற்றிடும்
கோதையே நீ
உன்னை திருத்தி விடு
உனக்காக இல்லாவிடினும்
உண்மையாய் காதல் செய்ய
உலகிலே காத்திருக்கும்
உத்தமமான சில ஆண்களுக்காய்

எழுதியவர் : அன்புடன் அருந்தா (9-Feb-15, 12:30 pm)
Tanglish : naagareega penne
பார்வை : 74

மேலே