எதிர்காலம்

காத்திருந்தேன்
காலம் வரும் வரை
எதிர் பார்த்திருந்தேன்
கனவுகள் கரையும் வரை
நான்
என்பதை மறந்து
நீ
என்பதை உணர்ந்து!!
பரந்த வானம்,
விரிந்த கடல்,
வேடிக்கை
வாடிக்கையில்
சுற்றுலா பயணிகள்
நானும்
சுற்றுலா பயணி தானோ??
பிறந்தேன் கண்ணீரில்
வளர்ந்தேன் கண்ணீரில்
மடிந்தேன் கண்ணீரில்
என்பது எழுதப்படாத
உண்மையோ??
பேதலிக்கும் மனது
போதை தெளியாத சுற்றார்
கலந்து கரைந்து
மாற்றப்படுவேனோ??
கபடமில்லா நெஞ்சம்
கள்ளமில்லா மக்கள்
வளர்ச்சியில் முதன்மை
ஊழலில்லா தேசம்
சுதந்திர வீரர்கள் கண்ட கனவு
காத்தாடியாய் காற்றில்
அதன் கயிரோ
ஊழலின் பிடியில்!!
எழுதப்படாத உண்மையை
எழுதிடுவோம்
ஒற்றுமையில் ஓங்கி
உயர்வுக்கு பாதை வகுப்போம்!!