அன்புள்ள அப்பா

அன்புள்ள அப்பா .....

அழகு தமிழில் பெயர் வைத்தாய்....
கற்பக கனியதைக் கற்க வைத்தாய் .....
கைப்பிடித்து நடக்க வைத்தாய் .....
தோள்மீதுபோட்டு தாலாட்டினாய் ....
கருவறை இருந்திருந்தால் நீயும்
என்னைச் சுமந்து இருப்பாயோ ???
இல்லாமல் போனதால்தான்---இன்றும்
என்னைக் கண்ணுக்குள் வைத்து சுமக்கிறாயோ ???

உன்பாசம் கொண்ட என் நெஞ்சமதில்
கவலைகள் யாவும்,
காற்றில் பறந்தோடியது .....
காயங்கள் யாவும் ,
கடலில் கரைந்தோடியது....
முனகல்கள் யாவும்,
முகிலில் மறைந்தோடியது ....
முயற்சிகள் யாவும் ,
முன்னேற்றத்தைத் தந்துள்ளது ...

அந்த ஆண்டவனிடம் வேண்டுகிறேன்
அடுத்த ஜென்மம் வேண்டும் என்று ,,
நான் உன் மகளாக பிறக்க அல்ல
நீ என் "மழலையாக " பிறக்கவேண்டும் என்று ......

எழுதியவர் : சுடர்விழி (11-Feb-15, 9:56 am)
Tanglish : anbulla appa
பார்வை : 672

மேலே