என்ன உறவு

புதிதான ஓர் உணர்வாய் அன்று
பூத்தாய் என்னுயிரில் வந்து !

இதுவென்ன உறவென்று தெரியாமல்
முழித்தேனே நின்று !

விழியுருக கையோடி வந்து தடைபோட
மனமுருக உன் அன்பே முதல் மருந்தாக
மற்றுமொரு தாயாய் உன்னை கண்டேன் !

பொழுதெல்லாம் சிந்தித்தேன் புலனாகவில்லை
வந்த தடம் ஏதும் இல்லை இனி உன்
தடமின்றி தனியே ஓர் பயணமில்லை !

நம்மிடையே என்ன உறவென்று
கேட்போருக்கு என்ன சொல்ல ?

“நட்பு” என்று சொல்வதை தவிர
வேறொன்னும் இல்ல !

நட்புக்கு இணையா எந்த உறவுமில்ல !

எழுதியவர் : செந்தில் குமார் ஜெ (11-Feb-15, 9:36 am)
Tanglish : yenna uravu
பார்வை : 127

மேலே