பிரிவின் வலி

பூவின்
வாசம்
உணர்ந்தேன்
அது
வாடும் வரை ....
ஆனால்
என்றும் வாடா
பூவின்
வாசம்
நுகர்ந்தேன்
உந்தன் உருவில் !!...
எனை நீ கடக்கும் போது!!!....

வானத்தின்
அழகை கண்டேன்
வெண்ணிலவின் வாயிலாக
இரவில்!!....
ஆனால்-எந்தன்
காதல்
வானத்தின்
அழகை கண்டேன்
என்னவளின் கண்ணில்
நண்பகலில் கூட !!..
எனை நீ பார்க்கும் போது!!......

பெண்ணே
ஏனோ
என் கண்ணில் விழுந்தாய் !!
பெண்ணே
ஏனோ
நீ என்னில் நுழைந்தாய் !!..

கண்களின்
வழியே
நான் பார்க்கும் பார்வை
எங்கும் தாரிகை .....
உள்ளத்தில்
என்றென்றும் இருப்பது நீ தான் ...
அதை நினைத்தாலே
வரும் வேதனை!!....

உன்னோடு நான் வாழ்ந்த
நொடி ஒன்றே போதும்
வாழ்வின் அர்த்தம் கண்டேனே !!
நீ தந்த ஸ்பரிசத்தை
நான் இன்றோ நினைத்தால்
இதயத்தின் வலி கூடுதே !!..

பெண்ணே
ஏனோ
எனை விட்டு பிரிந்தாய்!!
பெண்ணே
ஏனோ
காற்றை போல மறைந்தாய்!!..

எழுதியவர் : பிரதீப் நாயர் (11-Feb-15, 12:50 pm)
Tanglish : pirivin vali
பார்வை : 581

மேலே