உன் கடிதம் பேச ………………

பல வரன் பார்த்தேன்
மௌனமாக இருந்தாயடி

பல இடங்களில் கடன் வாங்கினேன்
சலனமின்றி இருந்தாயடி

பல ஊருக்குப் பத்திரிக்கை கொடுத்தேன்
தடுக்காமல் இருந்தாயடி

பல பொன் உருக்கித் தாலிச் செய்தேன்
பிசிராமல் இருந்தாயடி

பல பேர்க் கூடியிருக்க
அப்பா என்னை மன்னித்துவிடுங்கள் என்று
உன் கடிதம் பேச
உயிரோடு கொன்றுவிட்டு சென்றாயடி ……………….!

எழுதியவர் : ராஜா (11-Feb-15, 2:48 pm)
பார்வை : 206

மேலே