இறந்திடவே நான் பிறந்தேன்
உயிர் தந்த தந்தை உண்டு,
வலி தாங்க தாயும் உண்டு,
உணர்ந்தேனே பெண்ணே
உந்தன் பிரிவாலே நானும் இன்று.
சிரிப்பூட்ட நண்பன் உண்டு,
உரையாற்ற உறவும் உண்டு,
உணர்ந்தேனே பெண்ணே
உந்தன் பிரிவாலே நானும் இன்று.
ஏமாற்ற கடவுள் உண்டு,
ஏமாற மனிதன் உண்டு,
உணர்ந்தேனே பெண்ணே
உந்தன் பிரிவாலே நானும் இன்று.
இமைக்காத நிலவைக் கண்டு,
உறங்காத இரவும் உண்டு,
உணர்ந்தேனே பெண்ணே
உந்தன் பிரிவாலே நானும் இன்று.
அழகான பெண்கள் உண்டு,
உனைப்போல 'பெண்ணா' உண்டு,
உணர்ந்தேனே பெண்ணே
உந்தன் பிரிவாலே நானும் இன்று.
வலி மட்டும் வாழ்க்கை இங்கே,
கண்ணீர் மட்டும் கவலை இங்கே,
உணர்ந்தேனே பெண்ணே
உந்தன் பிரிவாலே நானும் இன்று.
உலகத்தில் எல்லாம் உண்டு,
வலி கூட சுகம்தான் என்று,
உணர்ந்தேனே பெண்ணே
உந்தன் பிரிவாலே நானும் இன்று.
எனை மறந்து போனாய் எங்கே!
எதை நினைத்து வாழ்வேன் இங்கே!
சுடுகாடு சுகம் தான் என்றால்,
எரிப்பேனே என்னை அங்கே...!