காதலும் கவிஞனும் தொடர் 2 - இது கவிகண்ட காதல்

இதுபோன்ற கவிதைகளும் தேசிய பாடல்களும் என்று காதலும் வீரமுமென்ற பிரிவுகளை மனதுள்கொண்டு எழுதிக்கொண்டிருந்தேன். காதற் கவிதைகள் ச்ற்று அளவுமீறிய?? வர்ணனைகளைக் கண்டபோது , கருதூட்டதில் சில முகச்சுழிப்புகள் தோன்றின. அதை நான் எதிர்தேன் அந்தக்காலம். அதற்கு சில கவிதைகளு எழுதினேன்.

அதை பார்ப்பதற்கும் முன்னர் காதற் கவிதைதைகளில் ஒன்று

தென்றல் அலைந்திடத் திங்கள் எழுந்திடத்
தேன்மொழியாள் நடந்தே -இளங்
கன்றெனத் துள்ளியே கட்டியணைந்தனள்
கன்னஞ் சிவந்திடவே
குன்றெனும் கொள்கை மனதிருத்தியொரு
கோபுரமானவளின் நெஞ்சில்
நின்ற உரங்கண்டு எண்ணமழிந்திட
நிர்க்கதி யாகிநின்றான்

கொஞ்சும்குரலதும் கூவுமிளங் குயில்
கோலமெனத் தமிழும் -அவள்
பஞ்செனும் வாலைப் பருவத்தி னோரெழில்
பண்ணும் துயரனைத்தும்
பிஞ்சிளங் கைபட பெண்ணவள் மேனியில்
பொங்கிடும் ஆசையதும் - காண
வஞ்சி விளைந்தது வண்ண விழிகளில்
வந்து நின்றேங்கிய தென்

அஞ்சு விரல்களில் என்னதோர் மந்திரம்
ஆயிழை கொண்டிருந்தாள் -அவை
பஞ்செனும் மேனியில் பட்டதும்அங்கவன்
பாதி உணர்விழந்தான்
கஞ்சனுமல்லக் கவிஞனுமல்லத் தன்
காதலியைப் படிக்க அவன்
மிஞ்சியதேதுமே இல்லையெனப்பொழி
மேகமெனக் கலந்தான்

நெஞ்சம்கலந்திட நீதிபிழைத்திட
நெய்தது கிலெடுத்து -அவர்
வஞ்சனையோடெதிர் நின்றவர்தம்மையே
கெஞ்ச இழிமைசெய்தார்
வெஞ்சினம்கொண்டவர் வேதனைசெய்வரென்
றஞ்சியே கண்டிருக்க -அவர்
கொஞ்சிமகிழ்ந்திட கோடிமலர்முகை
கொட்டி குவிந்ததடா

கல்லொடு கல்லைஉரசப் பெருந்தீயை
கானகத்தர் படைப்பார் -இங்கோ
மெல்லெனும் பஞ்சினை பஞ்சு உரசிட
மேனி எரிந்ததடா!
முல்லை மலரெனும் வெண்ணிறக்கண்களில்
மோகம் சிவந்திடவே -அவள்
பொல்லாச்சினமெடு பாவையென்றேவிழி
பூத்துக் கருக நின்றாள்!

நல்ல இரவினில் நாடறியா சமர்
நங்கையும் வாளெடுத்தே -காளை
கொல்லும்விழி கொண்டு கூடி வென்றகதை
சொல்லவள் நாணுவதேன்
அல்ல அல்ல அவள் வென்றது நீயென
வேந்தன் மடிகிடந்தாள் -மூடி
யுள்ளரகசியம் என்னில் எதுமீளச்
சொல்லுன் அடிமை என்றாள்

எழுதியவர் : கிரிகாசன் (11-Feb-15, 3:36 pm)
பார்வை : 52

மேலே