வானம் எழுந்து நடக்க உதவும் - உங்கள் நம்பிக்கையை கொஞ்சம் ஊன்று கோலாக கொடுங்கள்

முடியும் ஏறு - நிச்சயம்
முயன்று பாரு....!!
முளைக்கும் காலு - இனி
முன்னேற்றமே வாழ்வு..!!

உடைந்ததை நினைத்தால்
உடலுக்கே சோர்வு
உற்சாகமாய் இருந்தால்
உண்மைக்கு வாழ்வு.....!!

தொடர்கின்ற முயற்சிகள்
தோற்பது இல்லை - நாம்
தொடப்போகும் வானமும்
தூரத்தில் இல்லை - எனவே

முடியும் ஏறு - நிச்சயம்
முயன்று பாரு....!!
முளைக்கும் காலு - இனி
முன்னேற்றமே வாழ்வு..!!

எழுதியவர் : ஹரி (12-Feb-15, 7:00 am)
பார்வை : 121

மேலே