இரு வரிகளில் ……

வலி உணர்ந்தவன்
வழி தவறமாட்டான் ……!

வேடிக்கையான உலகில்
வாடிக்கையாகவே இருந்து விடாதே ……!

வேலி இல்லாத உலகில்
கேலியோடு அலையாதீர் ……!

கஷ்டப்பட்டு உழை - ஆனால்
கண்ணீர் விட்டு உழைக்காதே ……!

கனவை வாங்கு - தயவுசெய்து
கடன் வாங்காதே ……!

தாடியோடு அலைவதை விட
விழி தேடி அலைவதே மேல்……!

பழி சொல்லும் உலகில்
விழி சொல்லும் அளவிற்கு வாழ் ……!

வான் உயர்ந்து வாழ்வதை விட
வாழ்வில் விட்டுக்கொடுத்து வாழ்வதே சிறப்பு ……!

எழுதியவர் : ராஜா (12-Feb-15, 3:00 pm)
பார்வை : 175

மேலே