அழகின் அழுகுரல்கள்
வந்து போன
வசந்தங்களை யெண்ணி
புலம்பி மடிகின்றன
பூககள்
மனத் தவம் கலைந்து
அலைகின்றன
மவுன இதழ்களை விட்டு
உதிர்ந்த வார்த்தைகள்
பாலைவனத்து
ஒட்டகங்களாய்
மனசைப் பிரிந்து வந்த
கவிதைகள்
இமைச்சிறகு
ஏக்கங்களோடு
காகிதங்களாகிவிட்ட
கனவுகள்
இங்கே
சிகரங்கள் அழுவதில்லை
ஜீவநதிகளே அழுகின்றன
பனிச்சிகரங்களைப் பிரிந்துவிட்ட
பரிதவிப்பில்
கண்கள் அழுவதில்லை
கண்ணீர்தான் அழுகிறது
கண்மணிகளை பிரிந்துவிட்ட
கலக்கத்தில்...! (1995)
('தரையில் இறங்கும் தேவதைகள்' நூலிலிருந்து)
(சென்ற வருடம் மே எழுத்தில் பதிவானது. இது மறு பதிவு )