வெள்ளை நிற ஆக்சிஜென் விசவாயு
ஒரு நிமிடம் நின்று போகும் மூச்சுக்காற்றை
நினைத்து பார்பவர்கள் இருந்தால்...
செவ்விதழ் ரோஜா உதடுகள்
வயதோ 15!...
பிஞ்சு விரல்களுக்குள் பஞ்சு சுருள்
புகையை கக்கியது.....
அவனை பெற்றெடுத்த அந்த பெண்ணவள் மட்டும்
பார்த்திருந்தால்...
பத்து மாதம் சுமந்தேனே!.....என் தேனே...
உன்னை சுட்டு விடுமென்று சூடான எதையும்
சுவைத்ததில்லை..
குளிர் காலத்தில் உன்னை சுமககும்போது
சுடு தண்ணீர் கூட குடித்ததில்லை.....
நீ பிறக்கும் பத்து நிமிடத்திற்கு முன்பு கூட நான் சுவாசிக்கும்
காற்றை விலை கொடுத்து வாங்கி என் சுவாசம் தந்தேனே- என் தலைமகனே....
என்று புலம்பியிருப்பாள்....
வெள்ளை நிற ஆக்சிஜென் விலை குறைவு தான்
உன் நுரைஈரல் விலை கொஞ்சம் கேட்டு பார்....
கொசுக்களுக்கு கூட ஆங்காங்கே
குளம் அமைத்திருக்கும் நல்ல உள்ளங்களுக்கு...
மொட்டு ஒன்றை தாங்கி செல்லும் தாய்களுக்கும், என் தோழிகளுக்கும் மட்டும்
ஏன்
இந்த வெள்ளை நிற ஆக்சிஜென் [விசவாயு].........
ஒரு நிமிடம் நின்று போகும் மூசுகாற்று
அது உன் தாய் தந்த ஜீவ காற்று....
என் தோழர்களே..
உயிர் கொல்லி என்று தெரிந்தும் ஏன்
உன் உதட்டில் முத்தமிடுகிறாய்.........