எங்கோ போகுதோ

எங்கே போகிறேன் என
தெரியவில்லை..
பயணம் புதிதா ?
பாதை புதிதா ?
எதுவும் தெரியவில்லை...
தொலைந்து விடுவேனா ? எங்கேயாவது
தொலைந்து தான் போவேனா ?
ஒருவேளை தொலைத்து விட்டேனோ ?
அதைத் தேடித்தான் போகிறேனா ?
அட , என்ன இது
எதுவும் புரியவில்லையே..
இன்னும் போய்க் கொண்டுதான்
இருக்கிறேன்..
இதோ இந்த மரத்தை கடந்து போகிறேன்..
அதோ அந்த மரத்தையும் கடந்து போவேன்..
ஆனால் ,
போய்ச் சேரும் இடம் மட்டும்
இன்னும் மர்மம் தான்..
பூலோக வாழ்வை துறந்து
மாயலோகம் தான் செல்கிறேனோ ?????

எழுதியவர் : ஜனனி ராஜாராம் (12-Feb-15, 5:07 pm)
பார்வை : 87

மேலே