காதலர் தினம்

பிப்ரவரி 14
காதல் காடு பசுமை
பெறும் நாள்

அந்த காட்டில் மணங்கள்
பல வண்ணங்களில் மலர்ந்து
பூத்து குலுங்குகின்றன

இருப்பினும் சில மணங்கள்
காகித மலராய் வாசம் வீச முடியாமல்
தவிக்கின்றன

பட்டாம் பூச்சி சிறகின்
ஓவியமாய் அழகும் ,அதிச்சயமுமாய் சில
காதல் இருக்கின்றன

இந்தியாவில் காதல் எழுதப்பட்ட விதி
ஆணும்,பெண்ணும் அதில் இணைக்கப்படும் போது
முடிந்தது எழுது கோலின் விதி

ஆப்பிளில் தூது அணுப்பிய ஆதாம் காதல்
காதலுக்கு தாஜ்மஹால் கூடு செய்த
ஷாஜகான் காதல் வரலாறு கண்டது

எப்படியோ முட்டி மோதி மண்ணை
பிளந்த விதை -பாறையை முட்டி
பிளக்க முடியாமல் தெம்பிழந்து போக
மண்ணுக்குள் மாளிகை கட்டிகொள்கிறது

காதல் மலர்கள் கல்லறையிலும் கவிபாடும்
மலர் செண்டுக்குள் மழை பொழியும்
மலரின் மகரந்தம் இன்று

பாறையில் பெயர் எழுதி
இதயத்தில் உயிர் எழுதி
மகிழ்ந்திடுமே வாழ்ந்திடுமே

தாமரை கூட விலை உயரும்
தர்மம் கூட மழையாய் பொழியும்
பழைய பொருள் கூட புதிதாய் பளக்கும்

தோல்வி உற்ற காதல்
தோல் உரித்து மெண்மை பெறும்
கல்லறை சேர்ந்த காதல்
மெழுகு ஏற்றி வழி படும்

பரிசுகள் எல்லாம்
சிபாரிசு செய்யும்
கடிதங்கள் கலங்கரை விளக்கமாய்
ஒளிவிசும்

கடற்கரை சாலை எல்லாம்
மூச்சு திணறி வீம்பி அழும்

ஆனால் எனக்கு இன்னும்
வரவில்லையே பிப்ரவரி 14

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (14-Feb-15, 8:39 am)
சேர்த்தது : பன்னீர் கார்க்கி
Tanglish : kathalar thinam
பார்வை : 94

மேலே