ஆம் ஆதமி கட்சியின் வெற்றி பாடம் பயிலுமா பாரம்பரிய கட்சிகள்

ஒரு தொண்ணூறு வருட பாரம்பரிய ஆர் எஸ் எஸ் மரபில் உதித்த ஒரு கட்சி . அறுபது வருடம் நாட்டை ஆண்ட ஒரு கட்சி . எதிர்த்து நின்றதோ உருவாகி இரண்டு வருடமே ஆன ஒரு கட்சி,
ஒருகட்சியோ பதினைந்து வருடம் தில்லியை ஆண்டது .மறுகட்சியோ மிக பெருன்பான்மையுடன் மத்தியை ஆளுகின்றது . எதிர்த்து நிற்கும் கட்சியோ இருமாதங்கள் கூட ஆளமுடியாமல விலகிய கட்சி .
கார்பரேட் பணம் , தினம் ஒரு விளம்பரம் ஒருபுறம் .மற்றொருபுறம் மக்களை நேருக்கு நேர் சந்தித்து விளக்கும் கட்சி .
இப்படியான ஒரு களத்தில் ஒரு கட்சி எதிரணிக்கு வெறும் மூன்று சீட்டுகளை மட்டுமே மிச்சம் வைத்து அனைத்து இடத்திலும் வென்றது .
இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது .. எங்கே சென்றது மோடி அலை ..? சென்ற தேர்தலில் காங்கிரசின் தோல்வியில் இருந்து ஆளும் கட்சி எந்த படிப்பினையும் பெறவில்லையா ..??
வெற்றி ஆம் ஆதமியின் வெற்றி .ஆம் ஆதமிகட்சியின் வெற்றி மட்டுமல்ல .
சற்றே இருவருடங்களுக்கு முன் செல்லுவோம் . ஒரு ஜனாதிபதி ஊழல் ஒழிந்தால் நம் தேசம் வல்லரசாகும் என்கிறார் . ஒரு வயதான கிழவர் காந்தியவழியில் ஊழலுக்கு ஏதிராக லோக்பால் சட்டம் கொண்டு வரவேண்டும் என்கிறார் .கைது செய்ய படுகிறார் போராட்டம் வலுக்கிறது .எதிர்கட்சிகள் இதன் மூலம் தான் எப்படி பயனடையலாம் என்று ஆராய்கிறது லோக்பால் வெறும் கண்துடைப்பு நம்பிக்கையுடன் ..காத்திருப்பு வரிசையில் தள்ளப் படுகிறது . சட்டங்கள் சபைக்குள் உருவாகவேண்டும் போராட்டங்களில் அல்ல என்று அனைத்து கட்சிகளும் விமர்சனம் செய்ய .
நானும் அண்ணாதான் என்ற சுயராஜ்ய தொப்பி ஆம் ஆதமி என்ற பெயரில் கட்சியாக பிறக்கிறது .மக்களிடம் நேரடியாக ஊழலுக்கு எதிரான திட்டங்கள் பற்றியும் ,மக்களின் அவசிய தேவைகளுக்கு திட்டம் தீட்ட வேண்டிய அரசு கம்பெனிகளின் தேவைகளுக்கு ஏற்ப திட்டம் தீட்டும் அவலத்தையும் எடுத்து சொல்கிறது . மக்கள் வாக்களிக்க ,எதிர்கட்சிகளுக்கு தெரிந்த கேவலமான ராஜதந்திரமான கொடுத்து கெடுத்தல் விதி மூலம் ஆப் கட்சியை ஆட்சியில் அமர்த்துகிறது.பின் லோக் பால் சட்டம் பற்றிய விவாதத்திற்கு எதிர்ப்பு கொடுத்து அவர்களை கையாலாதவர்களாக் சித்தரிக்க முற்படுகிறது .ராஜினாமா .குதிரை பெற முயற்சி ..நீதி மன்றம் அணுகியது ஆம் ஆதமி கட்சி மறு தேர்தல் உத்தரவை நீதி மன்றம் வழங்க இந்த தேர்தல் நிகழ்ந்தது
பொதுவாக தோற்ற அந்த இரு கட்சிகளும் தங்களின் தோல்விக்கு உண்மை காரணம் என்ன என்பதை உணர்ந்த மாதிரி தெரியவில்லை .தில்லியில் பரவலாக இன்று பேசப்படும் விஷயம் ஹரியான பாஜ க அரசு இம்முறை தில்லிக்கு தண்ணீர் வழங்காது . எப்படி இலவச நீர் கொடுக்கும் புது அரசு .
அட முட்டாள் அரசியல் வாதிகளே மக்கள் விளக்குமாறால் உங்களை துடைத்தெறிந்தது இதற்குத்தான் .
மக்களோடு மக்களாக நின்று மக்களின் பிரச்சனைகளை பற்றி பேசும் கட்சியைதான் மக்கள் விரும்புகிறார்கள். வண்ணவண்ண விளக்குகளுடன் ஆன மால்கள் தேவை இல்லை .தன்வீட்டில் விளக்கு எரியவேண்டும் .தன் தெருவில் உள்ள தெருவிளக்கு எரிய வேண்டும் . தன் பகுதி சாக்கடை நீர் தேங்காமல் இருக்கவேண்டும் . தன் பகுதி மருத்துவமனை சுகாதாரமாக செயல்பட வேண்டும் . தன் பகுதி அரசு பள்ளியில் முறையான வசதியுடன் கற்பிக்க படவேண்டும் .இது போன்ற மிக மிக சிறிய சிறிய ஆசை தான் .அதற்கான திட்டம் தான் மக்கள் விரும்புவது .பார்ப்பதற்கு இவை தற்காலிகமாக தெரியலாம் . ஆனால் சுயராஜ்யம் என்பது இங்கிருந்துதான் துவங்குகிறது .
ஆனால் பல வருடங்களாக அரசாங்கம் இயற்றும் திட்டங்களை மக்கள் வேண்டினார்களா ..??. நிச்சயம் கிடையாது . நீங்களாக ஒரு திட்டத்தை இது மக்களுக்கு பயனுள்ளது என்று சொல்லி இயற்றுவது.பின்னால் அதனை கொண்டு ஒரு சில வர்தகதாரர்களை சந்தோசப்படுத்துவது .
இதற்கு தடையாகவரும் அனைத்து அரசு எந்திரங்களையும் , நிர்வாக சிதைப்பை ஏற்படுத்தி நிர்மூலமாக்குவது .
இதனை கடந்த நாற்பது வருடங்களாக மக்கள் வெறுத்து வருகிறார்கள் .நீங்களோ சாதி அரசியல் மத அரசியல் என மக்களை திசை திருப்பி கொண்டிருந்தீர்கள் .
இப்போது மக்கள் விழிப்படைந்து விட்டனர் என்பதற்கு சான்றுதான் ஆம் அதமியின் வெற்றி .. அவர்கள் மக்களின் மனநிலை புரிந்து அவற்றை நிறைவேற்ற வாக்களித்தனர் மக்கள் வாய்ப்பளித்தனர் .
மற்றொன்று கட்சிக்காரர்கள் என்றாலே தங்களை தாங்களே உயர்ந்தவர்கள் தங்களுக்கு எல்லா இடங்களிலும் சிறப்பு சலுகை வேண்டும் என்று கொள்கை கொண்டு தங்களை தாங்களே மக்கள் தொடர்பில் இருந்து துண்டித்துக்கொண்டு யதார்த்தத்திற்கு ஒவ்வா திட்டங்களிலும், செயல்பாடுகளிலும் தங்களை அர்பணித்த சானக்யத்தனத்திற்கு மக்கள் கொடுத்த சவுக்கடியே இந்த தேர்தல் முடிவு ..
இதற்க்கு மேலும் இவர்கள் திருந்தவில்லை என்றால் .தேசம் முழுதும் விளக்குமாறு சின்னம் ,சாணி வறட்டி சின்னம் ,செருப்பு சின்னம் ,குப்பைதொட்டி சின்னம் என பல சின்னங்களுடன் புதிய கட்சிகள் தோன்றி அவர்களுக்கு மக்கள் மகத்தான வெற்றி கொடுத்து .புதிய ஜனநாயகம் தோன்ற வழி வகுக்கும்.
.

எழுதியவர் : sindha (14-Feb-15, 12:26 pm)
சேர்த்தது : sindha
பார்வை : 97

சிறந்த கட்டுரைகள்

மேலே