சாமிப் படம்

கந்தன் கருணை..
திருவிளையாடல்
சரஸ்வதி சபதம்
அகத்தியர்
சக்தி லீலை..
ஆதி பராசக்தி..
இப்படி
சாமி படத்துக்கு மட்டும்
சினிமா போக
அந்த காலத்தில்
அனுமதித்த
அப்பாவிடம்
இப்போது பெற்றிருப்பேன்
அனுமதி..
கொஞ்சம் பொய் சொல்லி
இந்தப் படங்களுக்கு...
..
சாமி..(சாமிப் படம்ப்பா)
கந்தசாமி
முருகாற்றுப்படை
யாமிருக்க பயமேன்..(முருகர் படம்ப்பா)
இது கதிர்வேலன் காதல் (வள்ளி திருமணம் )
சைவம் (தேவாரம் பாடினவர்களை பற்றியது) ..

தலைவன் (பாட்டுடைத் தலைவன் பற்றியது)
லிங்கா..(ஈஸ்வரனை பற்றியது)
ஏகன்
அநேகன்..(சிவ புராணம் ..பற்றியது)
..
நல்ல வேளை..
இப்போது பொய் சொல்ல
தேவை இல்லை..!
அப்பாவும் இல்லை..
ஆனால்..
வம்பு வேண்டாம் என்று
எல்லா படத்திற்கும்
எங்களையும்(அம்மாவையும் ..அப்பாவையும் )
அழைத்துப்
போகிறான்
என் பிள்ளை!

எழுதியவர் : கருணா (14-Feb-15, 3:56 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 326

மேலே