காதில் விழாத படி

என்னப் போல
எகிறி
எகிறி
ரா முழுக்க
கூத்து கட்டி
எட்டொரு ஜனத்த
கொட்டாவி உடாம
பாக்க வெக்க
முடியுமாடா..
ஏதோ..
இன்னக்கி
தொழிலு செத்து
வாயடங்கி
கெடக்குதேன்னு..
எருது மேல காக்கா போல
குத்தி குத்திப் பாக்குற..
..
இப்படி ஒரு குரல்..
அந்த
சிறிய சமாதியிலிருந்து
அவ்வப்போது ஏக்கமாக
வந்து கொண்டே இருக்கும்..
வெளியில் தான்
யாராலும் கேட்க முடிவதில்லை!
உனக்கு எப்படிக் கேட்டது..
என்று கேட்கிறீர்களா..
..
..
நான் சொன்னது
இப்போது கேட்டதா..?

எழுதியவர் : கருணா (14-Feb-15, 3:15 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 157

மேலே