எம் பையன் பேரு

உங்க பையன்பேரு என்னங்க?

எம் பையன் பேரு தூய்மையானவன்.

என்னங்க இந்தக் காலத்திலெ பெத்த பையனுக்கு இப்படியா பேரு வைக்கிறது?

ஏங்க தாய் மொழிலே பெத்த பிள்ளைக்குப் பேரு வைக்கிறது கேவலமா? சச்சின் டெண்டுல்கரைத் தெரியாம நீங்க இருக்கமாட்டீங்க. சச்சின் -னா என்ன அர்த்தம்னு தெரியுமா?

தெரியாதுங்க.

சச்சின்றது இந்திப் பேரு. சச்சின் -ன்ற சொல்லுக்குப் பல அர்த்தங்கள் இருக்குங்க: தூய்மையானவன், குற்றமற்றவன், புனிதமானவன்
எம் பையனுக்கு சச்சின் -ன்னு பேரு வச்சிருந்தா ஸ்வீட் நேம் -ன்னு சொல்லுவீங்க. இது தாங்க தற்காலத் தமிழர் பண்பாடு.

******

Sachin = Pure, essence, existence.

எழுதியவர் : மலர் (14-Feb-15, 4:18 pm)
பார்வை : 161

மேலே