ஏனோ ஒருகாதல்--2

*****ஏனோ ஒருகாதல்--2*****

வண்ணம் பலகொண்டு - என்
நெஞ்சமதைக் கொள்ளைக்கொண்ட
அந்த வண்ணத்துப்பூச்சியின் மீது
ஏனோ ஒருகாதல்?
..............................................
துள்ளிக்குதித்து-என்
தோழியாய் துணைவரும் அழகிய
ஆட்டுக்குட்டியின் மீது
ஏனோ ஒருகாதல்?
...............................................
பார்க்கும்போதெல்லாம் புன்னகைத்து
பாசத்தோடு தலையசைக்கும் - என்
வீட்டுத்தோட்ட பூக்களின் மீது
ஏனோ ஒரு காதல் ?
.......................................
சாரலதில் சந்தம்பாடி சந்தனப்
பூங்காற்று வீசச்செய்யும்
தேன்மதுரத் தென்றலதின் மீது
ஏனோ ஒரு காதல்?
.............................
அதிகாலை வேலையதில்
அன்றுமலர்ந்த அதிசயப் பூக்களின்மேல்
அமர்ந்து கதைப் பேசும் பனித்துளிகளின்
ஏனோ ஒரு காதல்?
......................
அந்திசாயும் வேலையதில்
அடிவானமதில் செங்கனியாய்
செக்கச்சிவந்து நிற்கும் செவ்வானத்தின் மீது
ஏனோ ஒரு காதல்?
......................
கார்முகில் மழையாய் தூவும்
கால்பொழுது முன்னே கண்ணைக்கவரும்
வண்ணக்கொண்ட வானவில்லின் மீது
ஏனோ ஒரு காதல்?
...................................
தித்திக்கும் செங்கரும்பாய்
தெவிட்டாத தேனாய் வானத்து நிலவாய்
வாசல்நிற்கும் மழலையின் மீது
ஏனோ ஒரு காதல்?
.......................

எழுதியவர் : சுடர்விழி.இரா (14-Feb-15, 9:58 pm)
பார்வை : 86

மேலே