காக்கை சிறகினிலே - இன்னும் சற்று நொடிகளில் போட்டிக்கவிதை

எஞ்சோட்டு பெண்ணோடு
படிகார கைக்கோர்த்து
கிளித்தட்டு விளையாட...
அதைக்கண்ட என்மாமன்
தொரட்டி கையெடுத்து
என் திமில் அடக்க வந்தானே...
பத்தாயத்தினுள் ஒளிந்தேன்!!!
கிழவி பாம்படம் இழுத்து
பஞ்சாரத்தினுள் ஒளிந்தேன்!!!
அந்த இயற்கை நினைவுகள்
என் நெஞ்சை கனக்கிறதோ...
அந்நினைவின் கனவுகள்
முளைப்பாரியாய் முளைக்கிறதோ....