இன்னும் சற்று நொடிகளில்
இன்னும் சற்று நொடிகளில்
மழை கொட்டப் போகிறது
சிலர் ஓடி ஒழிந்து கொள்வார்கள்
வானம்பாடி பாட துவங்கும்
மயில் தோகை விரித்தாடும்
சிறுவர்கள் மகிழ்வார்கள்
விவசாயி ஆனந்தபடுவான்
தெருவோர வியாபாரி சலிப்படைவான்
பேருந்தில் செல்வோர் கனவில் லயிப்பர்
பேருந்து நிறுத்தத்தில் இருப்போர் முகம் சுழிப்பர்
இளைஞர்கள் காதல் செய்வர்
முதியவர்கள் திண்ணையில் அமர்ந்து கதை பேசுவர்
பெண்கள் சூடாக உணவு தயாரிப்பர்
நான் வழக்கம் போல் கவிதை எழுத எத்தனிப்பேன் .....
சிவ.ஜெயஸ்ரீ