காக்கைச் சிறகினிலே-இன்னும் சற்று நொடிகளில் போட்டி கவிதை

பெண்ணை சக்தியாக்கிய
பாரதியே !

நல்ல வேளை
நீர் மறைந்து விட்டீர்.

உன் பாட்டில்
சாத்திரம் கற்க வைத்தாய்.

அடுப்பூதும் பெண்களுக்கும்
படிப்பை முன்னிலைப்படுத்தினாய்.

வீரமிக்க மங்கைகளாக
விரும்பினாய்.

மழலை மாறாத
பிஞ்சு கூட இன்று
காம வெறியர்களுக்கு
விருந்தாவதை
கண்டிருந்தால்
உன் எழுத்தாணியின்
கூரிய முனையில்
குத்தியே கொன்றிருப்பாய்.

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (15-Feb-15, 10:48 am)
பார்வை : 76

மேலே