==== காக்கைச்சிறகினிலே- இன்னும் சற்று நொடிகளில் - போட்டிக்கவிதை

==== காக்கைச்சிறகினிலே====

காசு பணம் கண்டதும்
பாசம்அற்று போகும்
நாளைய நம் தலைமுறை
நாதியற்று நிற்கும் ??

கூட்டம்போட்டு பேசும்
மூடரினம் கண்டு
ஊமையாய் நிற்கும் நமக்கு
பதவி,புகழ் எதற்கு?

ஐந்து வயசு பிஞ்சுக்கு
ஐம்பதாயிரம் தந்து அழகிய
தாய்மொழியை அடகுவைக்கும்
நம்மை என்ன செய்வது ??

இயற்கைவளம் கொஞ்சும்
இந்தியதிருநாட்டின்
ஏழ்மை நிலைமாற நாம்
என்ன செய்கிறோம்??

உயிருள்ள பொம்மையாய்
உலகில்வாழும் நாம்
ஏன்இந்த பிறப்பு
என்று சிந்திப்போம் !!!!!......

எழுதியவர் : சுடர்விழி.இரா (15-Feb-15, 11:04 am)
பார்வை : 114

மேலே