காக்கைச் சிறகினிலே - இன்னும் சற்று நொடிகளில் - போட்டிக்கவிதை

கருவில் உதித்த நாள் முதலாய்
பத்தியமாய் இருந்து
என் ஆசைகளைக் குறைத்து
ஆகாத பண்டங்களை ஒதுக்கி
அல்லும் பகலும் பேணிக்காத்து
கடுமையான பிரசவ வலியைப் பொறுத்து
எத்தனை இரவுகள் தூங்காமல்
கண்விழித்து உன்னை பேணிக்காத்து
உன் ஒவ்வொரு வளர்ச்சியையும்
பார்த்து பூரித்து சமுதாயத்தில் பெரிய ஆளாக்கினேன்...
மகனே! அதனால் தான் இன்று
பார்வை கொஞ்சம் மங்கலாகிறது என்றதால்
என்னை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு
சிறகடித்து பறக்கிறாய்..
காணும் இடங்களிலெல்லாம்
மகனே உன் கரிய நிறம் தெரியுதடா..
நான் வாழ்ந்த வீட்டில்
திண்ணையில் மட்டும் இடம் கொடு
கடைசி நிமிடத்தில் அவர் வாழ்ந்த வீட்டில்
உயிர் துறக்க ஆசைப்படுகிறேன்..

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (15-Feb-15, 11:07 am)
பார்வை : 128

மேலே