மறைந்து மாயம் செய்கிறான் காக்கையின் சிறகினிலே -இன்னும் சற்று நொடிகளில்
யார் இவன் என்ன செய்கிறான்
உடல் முழுக்க உடையால் மூடியிருப்பான்
இமை மூடும் நொடிபொழுதில் மறைவான்
கற்பனையிலும் காணாத அதிசயம் செய்கிறான்
தொலைவில் தோன்றி அருகில் மறைவான்
இதழில் சத்தமில்லா முத்தம் தருவான்
ஈரம் காய்வதற்குள் மறைந்துவிடுவான்
கொத்துமலர் கொய்து வருவான்
சூடுவதர்க்குள் பிடுங்கி மேத்தையில் தூவுவான்
மழையில் குடை தருவான் விரித்து
வெளியில் நடக்கும் போது பிடுங்கி செல்வான்
காக்கையின் சிறகினை கொண்டு மைபூசுவான்
மயிலின் தொகை எடுத்து உடல்கூசுவான்
சிலந்தி வலை விரிப்பான்
யார் என்று அறியவில்லை
எதோ செய்கிறான் புரியவில்லை
முகம் பார்க்க வில்லை
அவனை நீனைக்காமல் மட்டும்
இருக்க முடியவில்லை