காக்கைச் சிறகினிலே - இன்னும் சற்று நொடிகளில் - போட்டிக்கவிதை

மெல்லிய இறகொன்று
என்முகம் மோத
மெல்ல கண்மூடினேன் ...
இருள்குடித்தது கண்கள்
உள்ளம் விழித்துக்கொண்டது
காற்றின் இதமான வருடல்
என் உடல் நனைக்க
மழைத்துளிகள் ஓசையுடன்
செவிகளில் இறங்கியது
மலர்களின் வாசம்
நாசிக்குள் ஊடுருவி
ஐம்புலன்களும் மலர்ந்தன
என்னுள் ...
இறகின் நிறம் கருமையெனில்
மனித மனங்களின் நிறம் ..?
வெளிச்சத்தின் விசை
இருள்கீற்றைக் கிழித்துக்கொண்டு
இதயம்வரை பாய்ந்தது ...!
தூரத்தில் எங்கோ...
கரையும் காகங்களின் மொழிகள்
காதுக்குள் ஏதோ உரைக்க
மெல்ல விழித்தது மனம்
"கூடி வாழ்ந்தால் கோடி நன்மையென்று ...?"
--------------------------------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்