பச்சை சிறகினிலே - - இன்னும் சற்று நொடிகளில் - போட்டிக்கவிதை

மானிடரில் கருப்பினத்தர் அடிமை
பறவைகளில்
பச்சை இனத்தர் அடிமை
சிவந்த கோவக்கனி இனித்தாலும்
சுதந்திர கனிக்கு இணையில்லை
சிவந்த மூக்கு இருந்தாலும்
சுதந்திர மூச்சு இல்லை
பச்சை சிறகினிலே அடிமையாக இருப்பதினும்
கரியநிற
காக்கை சிறகினிலே இருப்பது மேல்