காக்கைச் சிறகினிலே ++இன்னும் சற்று நொடிகளில் ++போட்டிக்கவிதை

எந்தன் கைச் சிறகுகள்
அளந்திடும் சின்ன புவியிது

வானத்தின் எல்லைகள்
உடைந்து வீழ
வைகறையை விழிக்குள்
பொத்தி வைக்கத் தோன்றுதடா

விடியலைத் தொலைத்த
சொற்களின் பிழைகள் ஏற்க
மறுத்திட்ட பெண்மையை
களங்கம் எரிக்கச் சொல்லுதடா

சட்டங்கள் தொலைத்த
நீதியைப் பற்றி சமாதனம்
ஆளும் வித்தை
கற்றுத் தருவேனடா

சுழன்றாடும் விதிகளில்
சம்பிரதாயங்களின் ஆழத்தில்
புதைந்து ஒளிவீசும் பொற்றாமரைகளே
பெண்மை மறவேல் !

சிந்தையில் பித்தம் கொண்ட
அழுக்கர்கள் வெந்து பொசுங்கிட
விரல் நகங்களில் தீ
வளர்க்க வேண்டுமடா

இவளிற்கு கரம் இன்னுமிரண்டு
புதிய பூமி சமைக்க வேண்டுமடா!!

எழுதியவர் : karthika AK (15-Feb-15, 12:00 pm)
பார்வை : 114

மேலே