காக்கைச் சிறகினிலே - இன்னும் சற்று நொடிகளில்
ஆதியும் இருட்டு
அந்தமும் இருட்டு
இடையில் மட்டும்
வெளிச்சம் கலந்த இருட்டு
மனித வாழ்வில் ....
ஒளியின் மகத்துவத்தை
இருளே அறிவிக்கன்றது ....
மனிதனின் மறுமுகத்தை
இருளே துகிலுரிக்கின்றது....
அமைதியின் ஆழத்தை
இருளே உணர்த்துகின்றது ....
கரிய இருளின்
கந்தர்வ அழகை
கண்டுகொண்டேன்
காக்கைச் சிறகினிலே ....