படைப்பாக்கத்தில் எனது நிலைப்பாடு -சந்தோஷ்

:

எனது படைப்புக்கள் யாவும் எந்தவிதத்திலும் தமிழ் இலக்கியத்தின் கோட்பாடுகளிலோ அதன் பரிணாம வளர்ச்சியலோ பங்கேற்பது இல்லை. நிச்சயமாக நான் ஏற்றுக்கொள்கிறேன்.
அதற்கென்று தமிழாய்ந்த கவிஞர்கள் இருக்கிறார்கள். அவர்களால் தமிழ் சிறக்கட்டும். இலக்கியம் வளரட்டும். உலக அரங்கில் பெருமைபடட்டும்.. பெருமிதத்தோடு தமிழாய்ந்த கவிஞர்கள, எழுத்தாளர்களுக்கு உற்சாக குரல் கொடுத்து வாழ்த்து சொல்லி .. கொஞ்சம் தள்ளியே நிற்கிறேன்.

ஆனால்.. என் படைப்புக்களும், என்னை போன்ற மற்றவர்களின் படைப்புகளும் அதன் கோஷங்களும்.. அது வெற்று சலசலப்பாக இருந்தாலும்.. ஒரு சாமானியனின் சமூக மாற்றத்திற்கான கைகளை பிடித்து ஆறுதல் கூறுவதாகவோ அல்லது அவனினுள் சில கிளர்ச்சி ஊற்றி எப்படியாவது புரட்சி கோஷமிட உத்வேகம அளிப்பதாகவோ இருக்கிறது என நம்புகிறேன்.

சாமானிய தமிழன் வளராமல் தமிழ் மொழி மட்டும் வளர்ந்து என்ன பயன் என்கிற நினைப்பு எனக்கிருக்கு..

உலகத்தரமான தமிழிலக்கியம் மட்டுமல்ல,. உலகத்தரமான தமிழர்களும் தேவையே...... கூடவே மானுடமும் சிறக்க வேண்டும்.. அதற்கு உண்டான படைப்பாக்கத்திற்கு இலக்கியம் அனுமதி கொடுக்காவிட்டால்.. கூக்குரல்களும் கோஷங்களும் ... படைப்பாக்கத்தில் மேலோங்கிதான் நிற்கும்.. வேறு வழியில்லை...!

கோஷமிட்டே சுதந்திரமடைந்த தேசம் நம் தேசம் என்பதையும் நினைவு கூறுகிறேன்.

நான்...........தமிழிலக்கியத்திற்கு அர்பணிக்கபடாத ஒர் எழுத்தாளன் என்ற சாபத்திலே எழுதி எழுதி மாண்டுவிடவே விரும்புகிறேன். விதைப்பது வெறும் வெறும் எழுத்துக்கள் தான். அது மாற்றுவது என்னவோ சமூகத்தின் தலையெழுத்து தான்.!

நன்றி........!!


-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (15-Feb-15, 6:56 pm)
பார்வை : 81

மேலே