எம்எல்ஏ-வேலைக்கு ஆட்கள் தேவை

தமிழ்நாட்டில் வருகிற 2016-ஆம் ஆண்டு எம்.எல்.ஏ வேலைக்கு 234 ஆட்கள் தேவை
நல்ல சம்பளம் நிறைய கிம்பளம் கல்வி தகுதி எதுவும் தேவையில்லை

அரசியல் அடிபிடி வெட்டு குத்து சூது வாது தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை
ஏதேனும் அரசியல் கட்சியில் அடி பொடி தொண்டராக இருந்தால் நல்லது

மாதம் ரூபாய் 55000/- சம்பளம்.......

இது தவிர...............

-போக்குவரத்து அலவன்ஸ்-குளிர் சாதன அடுக்கு ரயிலில் இரண்டாம் வகுப்பு பயணச் சீட்டு மற்றும் ரயில்வே அலவன்ஸ் வருடத்திற்கு ரூ.20,000/-

-தினப்படி ரூ.500

-டெலிபோன் வசதியாக தங்குமிடத்தில் ஓன்றும் வீட்டில் ஒன்றும் இலவசம்

-இலவச மருத்துவ வசதியுடன் தேவையான மருந்துகளும் இலவசம்

-ஓர் உதவியாளருடன் தமிழ்நாடு முழுவதும் பேருந்து பயணம் இலவசம்

-இன்னும் பிற சலுகைகளுடன் உடம்பை கட்டுக் கோப்பாக வைத்துக்கொள்ள சகல வசதிகள் நிறைந்த உடற்பயிற்சிக்கூடம்

அதுக்கும் மேல...........

ஒரு முறை எம்.எல்.ஏ வேலை கிடைக்கப் பெற்றால்.........

சாகும் வரை பென்சன் தொகை ரூ.12000/- p.m. கிடைக்கும்

வேலையில் இருக்கும் போதே செத்தால்.......

லம்பாக ரூ.2 லட்சமும் வாரிசுதாரருக்கு மாதம் ரூ.6 ஆயிரமும் கொடுக்கப்படும்


இத்தனைச் சலுகைகள் நிறைந்தஎம்.எல்.ஏ.வேலைக்கு......

- கல்வி தகுதிகள் எதுவும் இல்லை

-மண்டையில் மறதி தவிர அறிவு எதுவும் தேவை இல்லை

- வாக்குறுதிகள் வாரி வழங்கத் தெரிந்திருக்க வேண்டும்

-எழுத்து தேர்வு எதுவும் இல்லை

-வேலைக்கான இண்டர்வியு (தேர்தல்) நடக்கும் போது
பிரியாணியும் குவாட்டரும் வாங்கிக் கொடுக்க வேண்டும்

அதுக்கும் மேல...........

சேலை,வேஷ்டி இவைகளுடன் ரூ.200 முதல் 2,000 வரை
வள்ளல் போல் வாரி வழங்கவேண்டும்


என்ன நண்பர்களே!

எம்.எல்.ஏ வேலைக்கு தயார் ஆகிட்டீங்களா.......?

முந்துங்கள் தமிழ்நாட்டில் 234 காலியிடங்கள் மட்டுமே உள்ளன
உங்களுக்கு போட்டியாக சினிமா நடிகர்கள் நடிகைகள் நிறைய பேர் வரலாம் முந்துங்கள்

யோவ்......
எம்.எல்.ஏ என்பது வேலை இல்லை அய்யா....
அது மக்களுக்கு சேவை செய்ய மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் அரசியல் பதவி
அவர்கள் நமக்காக சேவை செய்வதால் நாம் அவர்களுக்கு உபகாரமாக உதவி செய்கிறோம்


ஒ....அப்படிங்களா அண்ணேன்......

நான் விக்கிபீடியாவில விக்கி முக்கி தப்பா படிச்சிட்டு

ஏதோ எழுதிட்டேன் மறந்திடுங்க சாமியோவ்


குறிப்பு-இந்த நகைச்சுவை பதிவு சும்மா சிரிக்கமட்டுமே

யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (15-Feb-15, 5:26 pm)
பார்வை : 572

சிறந்த கட்டுரைகள்

மேலே