விழித்தெழு தமிழினமே

பகுத்தறிவாம் வீசியெறி கல்லினை-அவனுக்கு
சாதியம் மட்டும் உயர்திணை
ஓரினம் வீழ்வு சொந்தத்தால் சாவு
இதுவா வாழ்வு இனி வேண்டாம் எழவு

வெறிகள் வேட்டையாடும் உன்னை
நினைத்துக்கொள் நீ பிறந்த மண்ணை
குலம் நம் கண்ணாகும் முன்
இனத்தினை பொன் செய்யும் நீர்


சேயுடன் சேர்ந்த தாயும்
அனாதையாகும் பாயினில்
இனி வேண்டாம் நீ எழுந்திடு தமிழா !

நாளைய தலைவர்கள்
வீதியில் முண்டங்களாய்
இனி வேண்டாம் எழுந்திடு தமிழா !!

மூத்தோரின் உதிரங்கள்
துருப்பட்ட கூரைக்கு வர்ணமாய்
பெற்றோரின் மெட்டி விரல்கள்
வல்லூரின் தொண்டைக்கு வசந்தமாய்
இனி வேண்டாம் எழுந்திடு தமிழா !!

மாற்றம் கொண்டு வாரும்
நீர் விழித்தெழு தமிழனே/தமிழினமே

எழுதியவர் : கீதங்களின் வானவிநோதன் (15-Feb-15, 8:58 pm)
பார்வை : 83

மேலே