முற்றற்ற அவா
கண்ணாடி முன் நங்கை நின்றால்
தன்னையே தான் கண்டாள்.
செவ்விதழ் உதடுகள்
தேன் வடித்தன,
காந்தவிழி கண்களோ
காதல் பகன்றன,
கூறிய அவள் பார்வை
கூந்தலை ரசித்தன,
மூச்சிவிடும் மூக்கோ
மூச்சடைத்து அவளை ரசித்தன,
கோபுரகலச மார்பகங்களோ
கோதையின் அழகை மெருகூட்டின,
மெல்லிய இடையோ
மேனியின் அழகை பறைசாற்றின,
அன்னையின் அழைப்பால் - தன்
அங்கழகு ரசிப்பு முற்றுபெறாது,
திண்ணிய அவள் மனம் வேண்டாமென
தடுத்தும் முகமூடும் ஆடையால்
முக அழகை மறைத்து
முக்காடிட்டு சென்றால்
முற்று பெறா ஆசையுடன்....