அன்னையை நீ மறவாதே
... "" அன்னையை நீ மறவாதே ""...
உயிரின் உறைவிடம்
கருவறை சுமந்து
திண்டாடி தவித்தே
மண்ணுலகம் காட்ட
உயிரோடேனை புறம்தள்ள
துடியாய் துடித்தவளே !!!
கண்களை குளமாக்கி
வேதனை தனதாக்கி
மூச்சை உள்னிறுத்தி
பிரசவித்த பெருமகளே
உதிரத்தை உணவாக்கி
அமுதாய் தந்தவளே !!!
தியாகத்தாயே உனக்கு
மகனாகவே பிறந்ததில்
ஆயுள் முழுவதுமே
உனைனான் சுமந்தாலும்
எந்தன் கடமையிலே
சிறிதளவும் தீராதம்மா !!!
பெற்றெடுத்து பெருமிக்க
உச்சத்து வேதனையை
முத்தமிட்டு வந்தவளே
உன்னைவிட மகிழ்வெனக்கு
அன்னையாய் உனைனான்
பெற்றுவிட்ட காரணத்தால் !!!
பெற்றவளை வ(ழி)லியிலே
வெறும் வயிறாய் விட்டு
உடைகளின் சுருக்கத்தை
முறைசெய்யும் மானிடா
உதிரத்தின் உணர்வுகளை
புரிவதும் நீ எப்போது !!!!
அன்னையை தெருவிலே
விட்டுவிட்ட பிள்ளைகளே
“சீ” யென்ற ஓர் வார்த்தை
ஓங்கி நீ சொன்னாலும்
அன்னையின் காலடியுள்ள
சொர்கத்தை இழந்திடுவாய் !!!
என்றும் உன் அன்புமகன்,,
முஹம்மது சகூருதீன்...