காலமே பதில் சொல்

மாற்றங்கள் வாருகிறது ஆட்சியில்
ஆனால் தமிழன் வாழ்வில் நிலைமைகள்
எது வரினும் திரும்பாது பழைய வாழ்க்கை
போனது போனதுதான் அழிந்தது அழிந்தது தான்
அம்சமாக அமைதியாக நகர்ந்து சென்ற
இலங்கைத் தமிழன் வாழ்கை
இருந்த இடம் தெரியாமல் புதைந்து விட்டது
இனி அடுத்து வரும் சந்ததியாவது
அனுபவிக்க நம் தமிழன் நிலை மாறுமா
இலங்கையில் தமிழ் ஈழம் தடம் பதிக்கும்
காலம் தான் விரைந்திடுமோ
வினாவுக்குள் பதுங்கி நிற்கும்
கேள்வி இது விடை தருமா
தமிழன் தலைநிமிர்ந்து வாழ்ந்திட
இன்னும் என்ன செய்ய உத்தேசம்
காலமே பதில் சொல்ல விரைந்திடு

எழுதியவர் : பாத்திமா மலர் (16-Feb-15, 2:09 pm)
Tanglish : kaalame pathil soll
பார்வை : 69

மேலே