புகைவண்டியில் ஒரு பயணம்

முல்லை மலரும் கொடியாய்
வஞ்சியவள் சின்ன இடையாய்
அனந்தன் பெற்ற நடையாய்
வளைந்து நெலிந்து ஓர் பயணம்

பாதை தடம் புரண்டால்
பயணம் விபத்துக்குள்ளாகும்
வாழ்க்கை பாடம் சொன்னது
பிரிந்து தவிக்கும் தண்டவாளம்

நாட்டு நடப்பை காட்டியது
முன்பதிவு செய்த பெட்டிகள்
மேல்தட்டு மனிதனின் சொகுசும்
பாமரனின் வாழ்க்கை நெருடலையும்

அயிரைமீன் கூடைக்காரி அருகே
ஐயர் ஆத்து அம்மாள்
தீண்டாமை ஒழித்த கர்வத்தில்
ஒய்யாரமாய் போனது ரயில்

பின்னே செல்லும் மரங்கள்
மண்ணாய் போன சோகத்தில்
மெதுவாய் ஊர்ந்தது வண்டி
உள்ளூர வலித்தது போல

எழுதியவர் : Monisha (16-Feb-15, 2:04 pm)
பார்வை : 83

மேலே