மனித வெறிநாய்கள்
செயலற்று வீழ்ந்துள்ள
வீரர்களே - வாரீரா
யாம் வேட்டையாடவுள்ளோம்
அஃது,
கானகமில்லை, வானகமில்லை
காட்டையாலும் வனவிலங்கையுமில்லை
யாதெனில்,
பட்டுப்பூச்சி மென்னுடல்
சிறுதளிர் நங்கையை சூறையாடும்
மனித வெறிநாய் கூட்டங்களை...
நீர்,
கண்டீராயின் -அந்
நாய்களை - இந்
நாட்டில் கானது
செய்வீராக,
பால் மணம மாற
பசுந்தளிரை மேயும் - அவ்
அக்றிணை கூட்டங்களை
அவ்வுலகு அனுப்புவீராக...
அக்றிணை உயிரும்
அறம்பேணும் அறம்பேண
அத்திணையை இத்திணை
விட்டு நீக்குவீராக...
செய்வதறியா செயலற்று
சிலையான வீரர்களே
அழித்திடுவீர் அந்நாய்களை
இன்றேல்
அழித்திடும் நும்முடைமையை....