சாத்வீகம்

மழை அவிழ்த்துவிடப்பட்டிருந்தது..
காற்றின் கைகளை கொண்டு,
மேகங்களை உரசி தீயினை கொளுத்தும்
முயற்சியில் இருந்தது,குளிரெடுத்த பூமி ...!!

ஜன்னல் என் அருகிலிருந்தது
இல்லையில்லை
ஜன்னலுக்கு அருகில் நான் இருந்தேன்..

உரசி செல்லும் காற்று
இவ்வித்தியாசம் அறியவில்லை
எள்ளி நகைத்த வானம்
இடியென முழங்கியது

எப்போதும்போலவே இப்போதும் ஏமாந்தோம்
இல்லையில்லை
ஏமாந்தேன் இயற்கையின்முன்...

எழுதியவர் : கல்கிஷ் (16-Feb-15, 5:07 pm)
பார்வை : 186

மேலே