தோற்றவன் பரிசு

வானதேவதை வந்துசென்ற தடம்
வாண்டுகளுக்கு,
வருணன் வரைந்த வண்ணகோலம்
விடலைகளுக்கு,
வளைந்துவிட்ட ஊன்றுகோல்
வயோதிகர்களுக்கு,
வெறும் வண்ணசிதறல்
வல்லுனர்களுக்கு,
எப்படி உரைப்பேன் நான்
இவர்களுக்கு
தவறாக படைத்துவிட்ட படைப்பினை
குறியிட்டு அடிக்கும் ஆண்டவனின் செயல்தான்
மழைநேர வானவில் என்று..!!

எழுதியவர் : கல்கிஷ் (16-Feb-15, 5:00 pm)
பார்வை : 77

மேலே