பாசத்தின் நகல் பபிக்கு - பிறந்த நாள் வாழ்த்து - இராஜ்குமார்
பாசத்தின் நகல் பபிக்கு - பிறந்த நாள் வாழ்த்து
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தூர தேசத்தில் பொழியும்
தூரலின் நுனிக்குள்
நுழைய நினைக்கும்
மழலையின் மனதோடு ...
கிரகங்கள் கீறலில்
துள்ளிக் குதிக்கும்
நட்சத்திர நகலாய்...
சோர்வில்லா சோலையில்
பூக்களின் புன்னகையை
முத்தமிடும் அருவியாய் ..!
பிடித்தக் கண்ணாடியில்
ரசிக்கும் உருவத்தின்
அழகியல் பிம்பமாய் ...!
நந்தவனத் தென்றலின்
முகத்தில் மோதிய
பூக்களின் மவுனமாய் ..!
சேவையின் ஆர்வத்தில்
அடையாள அர்ப்பணிப்பில்
விழிக்குள் விரைந்த
விழிப்புணர்வின் ஒளியாய் ...!
கனவிலும் கவலையை
கடத்திக் காட்டுக்குள்
விரட்டும் விரல்களின்
நயமிக்க நகமாய் ..
அடங்கி அழுகும்
காதலின் துடிப்பை
வண்ணத்தில் மறைக்கும்
வானவில் நிகழ்வாய் ...
அன்பின் சுடரோடு
விருப்பத் தேடலில்
விதிகளை உடைத்து
விதைகளை தூவி ..
விசித்திர நூலின்
முழு கருவை உணரும்
உள்மனதின் உணர்வாய் ...
வாழ்வின் அவசியத்தை
நொடிகளோடு தைத்து
ரசனையோடு வார்த்து ..
வரும் நாட்களில்
வசந்தமே வடிவாக
சுகந்தமே நிழலாக
ஆழ்மனமே நீயாக
ரசனைப் பிணைவுகளில்
கலைகளைக் கோர்த்து
யாதும் அன்பென
அன்போடு வாழ
அண்ணனின் ஆழ்மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...
அன்புடன் அண்ணன்
இராஜ்குமார் ..
தங்கை பாபிக்கு பிறந்த நாள் : 17.2.2015...