kaadal
பள்ளிப் பருவத்தில்
பக்கத்து வகுப்புக் காதல்.....
கல்லூரிப் பருவத்தில்
கடைத்தெரு தந்த காதல்.....
சந்தித்த கண்களினால்
சிறகடித்து வந்த காதல்.....
வாலிப்ப் பார்வையிலே
வேர்க்கவைத்த அந்த காதல்.....
அத்தனையும் காதல் தானா....?!
பருவத்தில் வந்து வாட்டும்
பாலினக் கவர்ச்சியெல்லாம்
உருவத்தால் வருவதன்றி....
உள்ளத்தால் வருவதன்று....?!
களவியல் மட்டுமே காதலானதால்
கற்பியல் கொஞ்சம் தேய்ந்துபோனது....!
காதலின் பொருள் திரிக்கப்பட்டதால்,
சாதிகள் அதில் புகுத்தப்பட்டது....!
தாழ்த்தப் பட்ட காதலென்றும்
ஒடுக்கப்பட்ட காதலென்றும்
ஒருபோதும் பிரிக்கமுடியாது
உண்மைக் காதலை...!!
டீக்கடைக்காரன் மனைவி
சேட்டுடன் ஓடிப்போகும்
"தினத்தந்தி", காதலெல்லாம்
காமத்தின் காட்சிப்பிழை....!!
ஒருகணம் பார்த்த ஒரப்பார்வையில்
இருமனம் கனிந்து இணைவதும்;
இதயம் புகுந்து, உயிரில் கலந்து
ஓருயிராகித் திரிவதும்;
காவியக் காதலின் இலக்கணமன்றோ...?!
உயிரில் கலந்து'
உணர்வை உசுப்பி
உலவிடச் செய்வது
உண்மைக்காதல்....!!
சரித்திர வில்முறித்து
சானகி கொண்ட இராமன்,
சாதிக்க வைத்ததெல்லாம்
சந்தித்த கண்களன்றோ...??
நட்பதில் காமம் கலந்தால் காதல்
உட்புகும் என்பதை உணர்வோமே...!
காமமே காதலாய் கருத்துரு மாறும்
காட்சியை நாமும் தவிர்ப்போமே...!