உசாருங்க உசாரு
தனது பணப்பையில் இருக்கும்
தன் அப்பா
அம்மாவின்வின்
படத்தை எடுத்துவிட்டு
நடப்பு
காதலியின் படத்தை வைக்கும்
கல்லூரிவரும் என்
சமூகத்தினருக்குப்
புரிவதே இல்லை...
ஐந்துரூபாய் பைவ் ஸ்டாரை
யாருக்கும் தெரியாமல்
அவளிடமிருந்து பெற்றுவிட்டு
ஐநூறு ரூபாயுடன்
பூங்காவில் அவளுடன்
ஆனந்தம் கொண்டாடும்
அனைத்துமே....
அவனுடைய
அப்பனும் ஆத்தாளும்
அனல்வீசும் ஆதிபகவனுக்குகீழ்
உழைத்ததென்று...