இவன்ள் இவனுளுக்காய்
..."" இவன்(ள்) இவ(னு)ளுக்காய் ""...
பெண்னழகினிலே மயங்கியே
கட்டிளம் காளையவன் கன்னியின்
விழிபார்க்க நிலமே பார்க்கிறாள்
சொல்லாத மெளன வார்த்தைகள்
அவனை கொல்லாது கொல்கிறது
நில்லாதா இந்நேரமென்றே அவள்
மனமும் துள்ளலாய் துடிக்கிறது !!!
மன்னவனே மதியில் கலந்தவனே
இனல்கள் இல்லையடா இன்பமே
என்றும் உன்னருகில் நானிருந்தால்
தீண்டாமல் தின்னுகின்ற திறமை
நிறையவே உன்னிடம் உள்ளதடா
உள்ளத்தில் உள்ளதை நீ அறிந்தும்
எட்டிநின்றே வேடிக்கை பார்பதேனோ !!!
வசந்தத்தின் தென்றல் முன்னிரவே
வாசல் வந்த வானத்து முழுநிலவே
வன்மங்கள்ளில்லா என் வல்லினமே
மெல்லினமிசைக்கும் இடையழகே
இடையினம் பேசிட தடையிலையே
வள்ளுவன் வழங்கிய என் முப்பாலே
மூன்றாம்பாலிளிவள் இனிப்பாலே!!!
என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...