குழந்தைகள் தேசம் 2

குழந்தைகளின்
மனங்களைத் தவிர
எங்கெங்கிலும்
இடைவெளிகள்
பரவிக் கிடக்கின்றன?!....

கோபத்திற்கும்
தாபத்திர்க்கும்
இடையிலான இடைவெளியை
ஆளுமை செய்கின்றன - எழில்
குழந்தைகளின் மழலைச்சொற்கள்?!.....

புத்திசாலி குழந்தைகள்
அப்பாவின் ஆசை வார்த்தைகளை மறப்பதில்லை!!....
அம்மாவைப் போலவே?!.....

வம்புகளும்
வீம்புகளும்தான்
குழந்தைகளின் மகிழ்ச்சி சூள்
எதிர்கால வளர்ச்சியின் நெம்புகோல்?!....

மனமுறிவுகளின்
சமாதான தூதுவர்கள்
புத்திசாலி குழந்தைகள்?!.....

தோப்புக்கரணம்
தண்டனையல்ல?!.....
உடற்பயிற்சி என்கிறது
குழந்தைகள் தேசம்!!.....

குழந்தைகள் போர்த்திக்கொள்ளும்
போர்வையின் இருளில்
கனவுகளும்?!.....

விளையாட்டாய் தொடங்கிய
தெரு விளையாடலில்
குழந்தைகளின் திருவிளையாடல்
துவக்கி வைக்கப்படலாம்?!.....

எழுதியவர் : வைகை அழகரசு (17-Feb-15, 8:32 pm)
பார்வை : 110

மேலே