குழந்தைகள் தேசம் 1

அம்மாவிடம்
அடிவாங்கிப் பழகிப் போய்
அடிப்பதில்லை பொம்மைக் குழந்தையை
மாறாக கொஞ்சி மகிழ்கின்றன!!....

தூங்க
அடம் பிடிக்கும் குழந்தைகள்
தட்டித் தட்டித் தூங்க வைக்கின்றன
குழந்தை பொம்மைகளை!!.....
அம்மா செல்லம் தூங்குடா!!....
அப்பா செல்லம் தூங்குடா!!.....

ஔவையாரை
அடையாளம் சொல்லும்
குழந்தைகளுக்கு "அப்பத்தாவை"
அடையாளம் தெரிவதில்லை?!......

பப்பிசேமாய்
குழந்தை பொம்மை
ஆடை வாங்கி வரச்சொல்லி
அடம்பிடிக்கிறது ஆபாசத்தை விரும்பாத
ஆசைக் குழந்தை?!......

அப்பாவாய்....
அம்மாவாய்....
ஆசிரியராய்.....
கையில் பிரம்போடு குழந்தைகள்
விளையாடி மகிழ்கின்றன?!......

பொறுப்பான
பெற்றோர்கள் பிளாஸ்டிக்
பொம்மைகளை வாங்குவதில்லை?!.....

குழந்தைகள் தேசத்தில்
வளர்பிறையை மட்டுமே
எதிர் பார்கிறார்கள் பெற்றோர்கள்?!......

எழுதியவர் : வைகை அழகரசு (17-Feb-15, 8:08 pm)
பார்வை : 178

மேலே