தொலைத்தல்

தேடுதலுக்கும்
கண்டுபிடித்தலுக்குமிடையேயான
பள்ளத்தாக்குகளின்
அதள பாதாளத்தினொரு
அடியாழத்தில்
வராக அவதாரமெடுத்து
முன்நெற்றிக் கொம்புகொண்டு
துளைத்து
மற்றவரின் அடிமுடியை
ஒருவருக்கொருவர்
சேகரித்துக் கொண்டிருக்கிறோம்
நம்மை நாம்
தொலைத்த படியே !

ஆயுள் முழுவதும்
ஓடு மீன் ஓட
உறுமீன் வருமளவும்
வாடியிருக்கும்
ஒற்றைக்கால் தவத்திலொன்றி
விரக்தியில் தொடங்கி
வெறுமையில்
முடிவடைகிற
தேடலில் -
இறுதிவரை
மற்றவரை மற்றுமின்றி
நம்மை நாமே கூட
கண்டுபிடித்தலென்பது
இயலாததாகிப்போகிற
இயலாமையின்
பெரும்பழியினை
பிறர் தொலைத்தலில்
சுமத்தி -
அவர்களைக் காணாதவர்களின்
பட்டியலில் சேர்த்து
மற்றவர்களின் பட்டியலில்
நாம்
சிறுகச் சிறுக
தொலைந்து கொண்டிருக்கிறோம் .

எழுதியவர் : பாலா (18-Feb-15, 8:48 pm)
பார்வை : 270

மேலே