மெய்க்காதல்

மெய்க்காதல் எது
வரையறைத் தேடினேன்...
கண்டேன் விடையை!
காதலில் சுமை கூட சுகமாக வேண்டும்!
பாரங்கள் உள்ளங்கள் தாங்கினால் காதல் தங்காது!
இதயங்கள் இரண்டும் ஒரு வரிசையில்
ஒருவருக்காக மற்றவரின் துடிப்பில்
இணையும் போது தெரியும்!
வயதானாலும்
அவரவர் உடலே அவரவர்க்கு பாரமானாலும்
மெய்க்காதலுக்கு மெய்த் தேவையில்லை!
பந்தக்காலில் தொடங்கிய பந்தம்
சொந்தக்காலில் செல்லாதபோது முடிய வேண்டும்!
யாருக்காகவும் எதற்காகவும்
ஒருவரை ஒருவர் பிரியாமல் துணையாக!
நீ பாதி நான் பாதி என்பதில்லை
முழுவதுமே நீ நீ நீ.... வேறில்லை!
உயர்வு தாழ்வு
கலகங்கள்,சூழ்நிலைகள்
எதற்கும் அடிபணியாது
உயிர்வாழும் ஒவ்வொரு நாளும்
ஊன்று கோல் நீ தானென வாழும்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (18-Feb-15, 8:31 pm)
பார்வை : 114

மேலே