இருவர் பா

ஏங்குதே என்நெஞ்சம் உனைச்சேர
தாங்குமோ என்னுள்ளம் நீ நீங்க
சிந்தையெங்கும் கலைமகள் நீயே
விந்தையானேன் எனக்குள் நானே!!!

உன்எண்ணம் எனக்குள் வெளிச்சம்
ஆயினும் பெண்மையால் கூச்சம்
வந்துஎன் கரம்பற்று மெல்ல
யாதினிகூற உன்னுள் நானே!!!

கலைமகள் இசைவுக்கு காத்திருந்தேன்
கடைவிழியில் அதைநான் கண்டுவிட்டேன்
வா...கண்ணே.. என்னுள் இன்று
ஆளத்தொடங்கு என்னில் நின்று!!!

எழுதியவர் : கிருஷ்ணா (18-Feb-15, 8:24 pm)
பார்வை : 93

மேலே