என் கண்ணோட்டத்தில் நம் காதல்
என் கண்களிலே காதலைக் கனிய வைத்தாய்...
உன் ஸ்பரிசத்திலே என்னைப் படிய வைத்தாய்...
என் இதழ்வழியே உயிரை உறிஞ்சிவிட்டாய்...
உன் மடியினிலே என்னை மறக்கடித்தாய்...
என் கனவுகளுக்குள் என்றும் காணப்பெற்றாய்...
என் இதயத்திலே இசையை மீட்டிவிட்டாய்...
வாழ்க்கையின் சுவையைக் கூட்டிவிட்டாய்...
பேரின்பத்தில் என்னை நீ ஆழ்த்திவிட்டாய்...
என் மூச்சினில் உன்னை நீ மூழ்கவிட்டாய்...
உன் விடுகதைக்கு இன்று நீ ஓர் விடையும்பெற்றாய்...

