பெங்களூர் -சாப்ட்வேர் Engineers -பொங்கல் விழாக்காலம் 2015
பெங்களூர் -சாப்ட்வேர் Engineers -பொங்கல் விழாக்காலம் 2015
ஐந்து நாள் விடுமறைக்காக கனாக்கள் கண்டு
அறுபது நாட்குளுக்கு முன்பிருந்தே
IRCTC KSRTC -ல் விழிகடுக்க தவமிருக்கும்
சாப்ட்வேர் முனிவர்கள் நாங்கள்
பாசம் தொற்றி கூடி குலாவிய விழாக்கள் யாவும்
நாட்காட்டியில் முன்னரே குறிக்கப்பட்டு
நாடகமாய் அரங்கேறும் நாட்களுக்க்காகவே
காத்திருக்கும் ஒவ்வொரு நொடியுமே
எங்களுக்கு தீபாவளி பொங்கல் தான்
C , C ++ படித்தாலும்
சீடைக்காக காத்திருக்கும் சின்ன பசங்க நாங்க
Java J2EE படித்தாலும்
ஜாங்கிருக்காக காத்திருக்கம் சக்கரக்கட்டி நாங்க
Unix SQL ...etc என்று பட்டியலிட்டால் ???
Outlook காலேண்டர் முழுதும் எங்கள்
விழாக்களே பளிச்சிடும் .....
புத்தாடை உடுத்த, புது பொருள் வாங்க
மாபெரும் படையோடு சிவாஜி நகர் படையெடுக்கும்
வீர சிவாஜி நாங்கள்-என்றாலும்
போரில் வெல்வது எங்கள் சொந்தங்களே.....
ஜனவரி பொங்கல்
பிப்ரவரி காதல்
ஏப்ரல் புத்தாண்டு
என்று தொடங்கி
நவராத்திரி கொலு
நவம்பர் தீபாவளி
டிசெம்பர் கிறிஸ்தமஸ்
என்று ஜனவரி முதல்
December வரை
பல நூறு விழாக்கள்
பல நூறு பேதங்கள்....
பிறந்த மாநிலம் விட்டு
பிழைப்பை தேடி
பணத்திற்காக வாழும் நம் வாழ்க்கை யாவும்
கணினியோடு போகட்டும்
இணையவலை அறுப்போம்
இனிய பண்டிகை படைப்போம்
இனிய நிகழ்வுகள் சுமப்போம்
என்றோ ஒருநாள் வரப் போகின்ற
உங்கள் வீட்டு விழாக்களுக்காக
விடுமறை கேட்டு இன்றே
LMS பேஜ்-ல் login செய்யங்கள்
வாழ்க பாரதம்
வளர்க பாரதம்